கேரளாவில் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து சாப்பிட்ட 5 வயது குழந்தை மற்றும் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள கான்கண்காட் பகுதியில் வசித்து வரும் வர்ஷா (25) என்பவர் மன உளைச்சலில் இருந்து உள்ளார். அதனால் ஐஸ்கிரீமில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது பாதி ஐஸ்கிரீமை சாப்பிட்ட பிறகு அவர் மயக்க நிலையில், அறைக்குச் சென்றார். மீதி இருந்த ஐஸ்கிரீமை அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த ஐஸ்கிரீமை பார்த்த வர்ஷாவின் சகோதரி மற்றும் 5 வயது மகன் ஆகிய இருவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பிறகு உடனே இருவரும் பிரியாணி சாப்பிட்டனர். சில மணி நேரங்களில் சிறுவனுக்கு கடுமையான வாந்தி ஏற்பட்டு உள்ளது.
உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதுமட்டுமன்றி ஐஸ்கிரீமை சாப்பிட்ட வர்ஷாவின் சகோதரியும் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் பாதி ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸாருக்கு உடனே புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வர்ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.