Categories
மாநில செய்திகள்

“அந்த கட்சியை பற்றி பேசுவது தேவையற்றது என நான் நினைக்கிறேன்”…. டி.டி.வி தினகரன் அதிரடி பேச்சு….!!!!

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து தன் குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

அதனை தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அ.தி.மு.க இன்று சின்னம் மற்றும் கட்சி இல்லாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியைப் பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன். இதனிடையில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அவ்வழக்கின் நிலை என்ன என்பது குறித்து எனக்கு தெரியவில்லை” என்று அவர் பேசினார்.

Categories

Tech |