முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், மயில் காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அதன் பின்னர் பெண்கள் மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். இதனையடுத்து கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் உடல் முழுவதும் அழகுகுத்தி அந்தரத்தில் தொங்கியபடி பறவைகாவடி எடுத்து சம்பவம் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.