Categories
உலக செய்திகள்

அந்தமான் தீவில் தொடர் நிலநடுக்கம்…. “சுனாமி எச்சரிக்கை இல்லை”…. வெளியான தகவல்….!!!

வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்று ஒரே நாளில் 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் நிலநடுக்கம் 11.5 மணிக்கு 4.4 ஆக ரிட்டர் அளவில் பதிவானது. 2 வது நிலநடுக்கம் பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் பதிவானது. அதனை தொடர்ந்து 3 வது நிலநடுக்கம் 2.6 மணிக்கு 4.6 ஆக பதிவானது. இதனையடுத்து 2.37, 3.02 மணிக்கு 4.7, 4.4 பதிவாகியது.

இதனைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் போர்ட் பிளேயர் அருகில் 4.6, 3.8 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்டது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Categories

Tech |