பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இதனை தொடர்ந்து “கெஹ்ரையன்” என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஓடிடி தலத்தில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ட்ரெய்லரில் படத்தின் கதாநாயகன் சித்தாந்துடன் தீபிகா படுகோனே நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மற்றும் முத்தமிடுவதுபோல காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த ட்ரைலரை பார்த்த செய்தியாளர்களில் ஒருவர் தீபிகா படுகோன்னிடம் ஆபாசக் காட்சிகளில் நடிப்பதற்கு ரன்வீர்சிங் ஏற்றுக்கொண்டாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த தீபிகா “நான் திரைப்படங்களில் கதாநாயகர்களுடன் லிப் லாக் காட்சியில் நடிப்பதும் மற்றும் என்னுடைய நடிப்பை பார்த்தும் ரன்வீர் சிங் பெருமை படுவதாகவும் கூறியுள்ளார்”. அவர் அளித்த பதிலை கேட்டு செய்தியாளர்களை விட ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸ்க்கு ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.