நடிகர் கார்த்திக் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அந்தகன். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நவரச நாயகன் கார்த்திக் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று நடிகர் கார்த்திக் அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் டப்பிங் ஸ்டூடியோவில் தியாகராஜன், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.