ஃபேஸ்புக் நிறுவனம் பிரான்ஸ் நகரத்தின் பெயரை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நகரத்தின் பெயரை ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஃபேஸ்புக் விதிகளுக்குட்பட்டு இல்லாததால். அந்த நகரத்தின் பெயர் பெண்களை தவறாக குறிக்கும் பொருளாக இருப்பதால் இனி சமூக வலைத்தளங்களில் இருக்காது என நகர மேயருக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இதனிடையே ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தந்ததால் அந்த நகரத்தின் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டது என தெரிவித்திருந்தது. பிரான்ஸ் மொழியில் அதன் அர்த்தம் வேறு என்பதை அறிந்து பின்னர் நகர மேயரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணையங்களில் வரும் என்பதை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த நகரத்தின் பெயர் Bitche என்பது குறிப்பிடத்தக்கது.