நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க -பா.ஜ.க கூட்டணி வர இருக்கிறது. அப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓடபோகிறார்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில் தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடர்பாக சி.வி சண்முகம் கூறியது நிஜம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுவிட்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க திமுக துடியாய் துடிக்கிறது. இதனை தான் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது” என்று அவர் கூறினார்