விவாகரத்து என்பது நினைத்து பார்க்க முடியாத வலி என பிரபல தொழிலதிபரின் முன்னாள் மனைவி கூறியுள்ளார்.
உலக பணக்காரர்களில் பில்கேட்சும் ஒருவர். இவர் கடந்த 1994-ஆம் ஆண்டு மெலிண்டா பிரஞ்ச் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையில் இருவரும் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மெலிண்டா பிரபல செய்தி நாளிதழ் நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் திருமண உறவில் நீடிக்காததற்கு சில காரணங்கள் உள்ளது. ஆனால் கொரோனா தொற்றின் போது நான் செய்ய வேண்டியதை செய்வதற்கான தனி உரிமை எனக்கு கிடைத்தது.
மேலும் பில்கேட்சிடம் இருந்து விவாகரத்து எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வலியை கொடுத்தது. அதனை கடந்து செல்ல எனக்கு தன்னம்பிக்கை இருந்தது. மேலும் நான் விலகிச் சென்ற நபரிடம் தான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் காலை 9 மணிக்கு நான் அழுது கொண்டிருந்தாலும், நான் விலகிச் சென்ற நபருடன் காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் இணைந்து எனது திறனை வெளிப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்