சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், 2-வதாக தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து பெற்றோர் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதோடு யூடியூப் சேனல்களும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பாலை 3-வதாக திருமணம் செய்து கொண்ட போது ரவீந்தர் அவரை விமர்சித்து இருந்தார்.
இதன் காரணமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்த பிறகு வனிதா தன்னுடைய twitter பக்கத்தில் கர்மா ஒரு B***H என பதிவிட்டு இருந்தார். அதோடு அவளுக்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்பது தெரியும். நான் அவளை முழுமையாக நம்புகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு தற்போது ரவீந்தர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இன்ஸ்டாவில் லைவில் பேசிய ரவீந்தர், நான் அவருடைய twitter பதிவை படித்தேன். கர்மா இ எஸ் மை என ஏதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை. அதைப் பற்றி பேச எதுவும் இல்லை. என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.