Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அது இருந்தால் விபத்து நடக்காது” சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மேம்பாலத்தின் இருபுறங்களிலும்  ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அருகில் கிழக்கு நீலம்பூர் கிளை கால்வாயின் மீது ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.  இந்நிலையில் மேம்பாலத்தின்   இரு பக்கத்திலும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால்  இந்தத் தூண்களில் எந்தவித அறிவிப்பும், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாததால் அந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக மேம்பாலத்தின் மீது  ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |