Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அது இருந்ததால தப்பிச்சாங்க… எதிர்பாராமல் மோதிய கார்… 2 பேருக்கு லேசான காயம்..!!

பெரம்பலூரில் கார், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் சோலை.ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி முன்னாள் தலைவர். தற்போது பெரம்பலூரில் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது காரில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரில் அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சக்திவேல் என்பவர் உதவி கேட்டு ஏறிக்கொண்டார். கார் கிருஷ்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது கரும்பு ஏற்றி வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

அதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் இருந்த போலீஸ் ஏட்டு சக்திவேல் மற்றும் சோலை.ராமசாமி ஆகிய இருவரும் காரிலிருந்து உயிர்காக்கும் பலூன் ஏர்பேக் வெளியேறியதால் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் பின்னர் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று அதன் பின் வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |