Categories
உலக செய்திகள்

அதுக்கு பயன்படுத்துறாங்க… அதனால இந்த நாட்டில் சிரிப்பூட்டும் வாயுவுக்கு தடை?

சிரிப்பூட்டும் வாயுவான  நைட்ரஸ் ஆக்சைடை இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதால் அதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என நம்பப்படுகிறது

பிரான்ஸில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு பலூன்களில் நிரப்பப்படுவதோடு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். ஆனால் அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் நைட்ரஸ் ஆக்சைடை போதைக்கு பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் அதிகரித்துள்ளது.

இதனால் நைட்ரஸ் ஆக்சைடு வயது வராதவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் அந்த வாயு ஏராளமான பக்கவிளைவுகளை உடலில் ஏற்படுத்த கூடும் என்பதால் தேசிய சுகாதார அமைப்பு நைட்ரஸ் ஆக்சைடு பற்றிய ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

Categories

Tech |