Categories
தேசிய செய்திகள்

அதுக்கு பதிலா என்னை தீயில் போட்டிருக்கலாம்… தீக்கிரையான நூலகம்… உதவும் மாநில அரசு…!!

கர்நாடகாவில் ஐசக் என்பவரின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அம்மாநில அரசு அந்த நூலகத்திற்கு 8243 புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரில் சேர்ந்த சையத் ஐசக் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடின உழைப்பின் மூலம் ஒரு நூலகம் ஒன்றை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நூலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ விபத்தில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளது. இதனையடுத்து அந்த நூலகத்தில் கன்னட மொழியில் குரான், பைபிள், பகவத் கீதை ஆகிய கன்னட மொழி புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

ஆகையால் கன்னட மொழி எதிர்ப்பாளர்கள் தான் இத்தகைய செயலை செய்திருக்க கூடும் என ஐசக் தெரிவித்துள்ளார். மேலும் புத்தகங்களுக்கு பதிலாக என்னையும் எனது குடும்பத்தையும் அவர்கள் தீக்கு இரையாக்கிருக்கலாம் எனவும் அவர் மனமுருகி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாநில நூலகத் துறை சார்பில் சுமார் 8243 புத்தகங்களை ஐசக் நூலகத்திற்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை அம்மாநில ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |