புஷ்பா படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் செம ஹிட் கொடுத்தது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து நடிகை ராஷ்மிகா தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.