தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. அது சென்னையிலிருந்து 480 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 410 கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதனால் பொதுமக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 5 கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது.