தான்சானியாவிலிருந்து அங்கோலா நாட்டிற்கு வந்த பயணிகளுக்கு கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு பல நாடுகளில் பல்வேறு விதமாக உரு மாற்றம் அடையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் வகை, தென்ஆப்பிரிக்க வகை, பிரேசில் வகை மற்றும் இந்திய வகை என்று பல்வேறு வைரஸ் வகைகள் பரவ தொடங்கிவிட்டது.
இதில் சமீபத்தில் திடீர் உருமாற்றம் அடைந்த மூன்று வகைகள் கண்டறியப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மேலும் பயங்கரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 34 திடீர் மாற்றங்கள் அடையும் வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் தான்சானியாவில் இருந்து அங்கோலா நாட்டிற்கு சென்ற பயணிகளிடமிருந்து கண்டறியப்பட்டிருக்கிறது.
மேலும் தான்சானியா நாட்டில் அந்நாட்டின் ஜனாதிபதி John Magufuli, கொரோனா பாதித்து மரணமடையும் வரை, தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு சுத்தமாக இல்லை என்று கூறப்பட்டது. மேலும் தற்போது இருக்கும் தடுப்பூசிகள் இந்த புதிய வைரஸை கட்டுப்படுத்த முடியாது என்றும், அதிகமானோருக்கு தீவிரமாக தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இந்த புதிய கொரோனாவால் உலகில் பரவி வரும் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மேலும் பல காலங்கள் ஆகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.