Categories
தேசிய செய்திகள்

அதிஷ்டம் இப்படி கூட வருமா…? கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டு… ரூ.6 கோடி பரிசு… இளம்பெண் செய்த நெகழ்ச்சி செயல்…!!!

கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்ததை வாக்கு மாறாமல் பின் வியாபாரி ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த ஸ்மிதா என்பவர் ஒரு சீட்டு கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்திருந்தது. குழுக்கள் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளரான சந்திரன் என்பவருக்கு கடனாக வழங்கியுள்ளார். அதற்கு ஆதாரமாக அந்த சீட்டை செல்போனில் படம்பிடித்து வாட்ஸ்அப் மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டுக்கு ஆறு கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த சீட்டை எடுத்துக்கொண்டு நேராக சந்திரனின் வீட்டிற்கு சென்ற ஸ்மிதா 6 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை கொடுத்து விட்டு. அந்த லாட்டரிச் சீட்டுக்கான 200 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டார். பரிசு விழுந்த சீட்டை தனக்கென வைத்துக் கொள்ளாமல் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரிடமே சென்று பணத்தை கொடுத்த ஸ்மிதாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |