யூடியூபில் பைக் ரைடிங் என்னும் நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டு அதன் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் டிடிஎஃப் வாசன். இந்த நிலையில் இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ அவரை தற்போது சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறது. சக யூடியூபரான ஜி பி முத்துவுடன் இவர் மேற்கொண்ட பயணத்தில் அதிவேகமாக சென்றது மட்டுமல்லாமல் தனது இரு கைகளையும் விட்டு வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
சாலை பாதுகாப்பு எனும் நோக்கத்தையே கெடுக்கும் விதமாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரின் அடிப்படையில் கோவை காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும் முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய ரசிகர்கள் உடனான சந்திப்பில் டிடி எஃப் வாசனுக்கு கூடிய கூட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.