மோட்டார் சைக்கிள் விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் நாச்சியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதியவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.