அதிவேகமாக வந்த டேங்கர் லாரி அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதிய காரணத்தினால் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ரசாயன பொருட்களை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் புனே நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. புனேயின் நவாலி என்ற பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சென்றதில் அடுத்தடுத்த வாகனங்களின் மீது மோதியது. இதில் கிட்டதட்ட பத்து முதல் பதினைந்து வாகனங்களின் மீது இந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்களில் பயணித்தவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினார். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்து அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.