கார் மோதிய விபத்தில் சாலையை கடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசி இந்திரா நகரில் பாப்பா நாயக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கோராகுத்தி பிரிவு சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது கேசவன் என்பவர் ஒட்டி வந்த கார் முதியவர் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான கேசவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.