ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் பல வீடுகள் தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் பெர்த் என்ற நகரில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் அதைச் சுற்றியுள்ள சுமார் 80 கிலோமீட்டர் பகுதிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ கடந்த 4 தினங்களாக பரவி வருவதால் தற்போது வரை சுமார் 70க்கும் அதிகமான வீடுகள் எரிந்து அனைத்தும் சாம்பலாகியுள்ளது. இதனிடையே தற்போது காற்றின் வேகமும் அதிகரித்திருக்கிறது.
எனவே மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைய போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களையும் வீட்டிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுபடுத்த 2 வான்வழி டேங்கர்கள் உள்ளிட்ட 21 விமானங்கள், தீயணைப்பு வீரர்கள் 500 பேர்களும் இணைந்து போராடி வருகின்றனர்.
மேலும் நேற்று மட்டும் சுமார் 11 தடவை நெருப்பின் மேல் வான்வழி டேங்கர்கள் தண்ணீரைக் கொட்டுவதற்கு சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பாதிப்படைந்த பெரியவர்களுக்கு ஆயிரம் டாலர் மற்றும் குழந்தைகளுக்கு 400 டாலரும் நிதி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.