கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் அந்த நபரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.