ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இரும்பு பொருட்களை அய்யம்பேட்டையில் இருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடி வந்துள்ளனர்.
அவர்கள் ஆண்டார்முள்ளிபள்ளம் கிராமத்தில் வசிக்கும் இளையபெருமாள், தமிழரசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தமிழரசன் மற்றும் இளையபெருமாள் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மினி லாரி மற்றும் இரும்பு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.