பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்திய ரூபாயில் 22 ஆயிரம் ரூபாய்க்கு பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கிய ஒருவருக்கு ஒன்றரை லட்சம் பணம் கிடைக்கிறது என்றால் இது அதிர்ஷ்டம் அல்லவா? இந்த வீடியோ கேப்டன் சாகில் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இன் சாவி தொலைந்து விட்ட காரணத்தினால் அதன் உரிமையாளர் ஒருவருக்கு ஏடிஎம் இயந்திரத்தை விற்கிறார். அதை எடுத்து வந்த நபர் அதனை உடைக்க தொடங்குகிறார். அதில் பணம் எதுவும் இருக்காது என்ற எண்ணத்திலேயே அவர் அதனை உடைக்கிறார்.
வழக்கம்போல் சுத்தி ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டு இருக்கும் பொழுது அதில் பணம் இருப்பதை கண்ட அவர் ஆச்சரியம் அடைந்தார். சுமார் 20 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் அனைத்து கருவிகளையும் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைகின்றன. முழுமையாக உடைத்த பிறகு அதில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்கும் பொழுது அதன் மதிப்பு சுமார் ஒன்றரை இலட்சம் இருந்தது. இதை பார்த்த அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.