Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி..! 10 வயது சிறுமியை…. காட்டுப்பகுதிக்குள் வைத்து சீரழித்து கொன்ற கொடூரன்…. தூக்கிய போலீஸ்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாநிலத்தில் மதுரா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை காணவில்லை என்று போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்..

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பல இடங்களில் தேடி வந்த நிலையில் இங்குள்ள காட்டுப் பகுதியில் 10 வயது சிறுமி நிர்வாணமாக கண்டுபிடிக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை..

இதுகுறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி) அபிஷேக் யாதவ் கூறியதாவது, சிறுமியின் குடும்பத்தினர் கொலைக்கு முன்  கற்பழித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த சதர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சிறுமி விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார், பின்னர் மாலை 5 மணியளவில் அவர் காட்டுப் பகுதியில் இறந்து கிடந்தார், என்றார்.  சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கிறோம். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தடயவியல் குழு மற்றும் நாய் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் குற்றவாளியை போலீசார் தேடிவந்த நிலையில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக  ஒரு நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். சிறுமியின் அதே பகுதியைச் சேர்ந்த குற்றவாளி, குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் யாதவ் கூறுகையில், ‘‘சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (40) என்பவரை கைது செய்தோம். “குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியிடம் ஆசையாக பேசி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் வியாழக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்” என்று கூறினார். காமக்கொடூரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |