குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆஸ்பயர் என்ற கட்டிடத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்நிலையில், லிப்ட் பழுதாகி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆஸ்பியர்-2 என்ற பெயரில் கட்டிடம் கட்டும் போது ஏழாவது மாடியில் இருந்து லிஃப்ட் பழுதடைந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்பயர் 2 என்ற கட்டிடத்தில் காலை 9:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து கிடைத்த தகவலின்படி அகமதாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அகமதாபாத் நகரில் கட்டுமான பணியின் போது பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.