சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி சத்யா(20). இவரை சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு ஆதம்பாக்கம் பகுதி சேர்ந்த சதீஷ்(23) என்பவர் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். . ரயில் நிலையத்தின் முன்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அங்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார். இதனால் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி சத்யா உயிரிழந்தார்.
இதையடுத்து கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவி ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் சிபிசிஐடிக்கு கிடைத்துள்ளது. அதில் சதீஷ் மாணவி சத்யாவை பின்தொடர்ந்தது முதல் ரயில் முன் தள்ளிவிட்டது வரை என அனைத்து தகவல்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இதை முக்கிய ஆதாரமாக வைத்து சதீஷை ஐந்து நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்போம் என்று சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.