இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை மூடுவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதாவது தனியாக ரூ 150 மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும் இந்த புதிய விதிமுறை மார்ச் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.