Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. “கணவனை பிரித்து விடுவார்களோ”… பயந்து போய் மனைவி எடுத்த முடிவு…!!

ஆவடி அருகே கணவரை  தன்னிடமிருந்து  பிரித்து  விடுவார்களோ  என்ற  அச்சத்தில்  திருமணமான பத்து மாதத்தில்  இளம்பெண்  தீக்குளித்து  தற்கொலை செய்து  கொண்ட  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்  மாவட்டத்தில் ஆவடி அருகே வசந்தம் நகர்  கணபதி கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு வயது 27.  இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவருக்கு வயது 25.  இவர் ஆவடியில்  இருக்கும்  ஒரு  பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர்கள்  இருவரும்  கடந்த 10 மாதங்களுக்கு  முன்பு தான் ஆவடி அருகே  திருவேற்காட்டில்  திருமணம்  செய்து கொண்டனர்.

சித்ராவிற்கு ஏற்கனவே  வேறு ஒருவருடன்  திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன.
கணவன்- மனைவியிடையே  கருத்து  வேறுபாடு  காரணமாக  இருவரும் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இவர் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு இரண்டாவதாக  நாகராஜ்  என்பவரை  திருமணம் செய்து  உள்ளார்.

இதற்கிடையே சித்ரா குடும்ப கட்டுப்பாடு செய்து  இருப்பது  நாகராஜுக்கு தெரியவந்துள்ளது . இதனால் கணவன்-மனைவிக்கு  இடையே  வாய்த்தகராறு  ஏற்பட்டுள்ளது.  மேலும் குடும்ப கட்டுப்பாடு செய்த செய்தி நாகராஜின்  தாயாருக்கு தெரியவர அவரை ஊருக்கு  வரும்படி அழைததாக  கூறப்படுகிறது.

இதனை அறிந்த சித்ரா தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை நாகராஜ்  திருமணம் செய்து விடுவாரோ என்று பயந்து போய்  வீட்டின்  மொட்டை மாடியில் உடலில் பெட்ரோல் ஊற்றி  தீ  வைத்தார்.  இதனையடுத்து  சத்தம்  கேட்டு  அங்கு  வந்த அக்கம் பக்கத்தினர்  கீழ்ப்பாக்கம்  அரசு  ஆஸ்பத்திரிக்கு  அவரை  கொண்டு  சென்றனர். அங்கு அவருக்கு  தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது.  எனினும்  சிகிச்சை பலனின்றி  நேற்று  மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த  சம்பவம்  குறித்து  போலீசார்   வழக்குப்பதிவு செய்து   விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.

 

Categories

Tech |