டெல்லியில் மண்டோலி சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் டாக்டர் ஒருவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கைதிகளின் உடல் நிலையை பரிசோதனை செய்ய சிறைக்கு சென்றிருந்தார். அப்போது ஒவ்வொரு கைதிகளின் உடல் நிலையை அவர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர் திடீரென பெண் டாக்டரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரை கற்பழிக்க முயன்றார். உடனே டாக்டர் அலறியதால் அங்கிருந்து சிறை காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைதி டாக்டரை கற்பழிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.