Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிர்ச்சி..! கபடி வீராங்கனைகளுக்கு….. “டாய்லெட்டில் உணவு”….. வேதனை தெரிவித்த தவான்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ளார்..

உத்தரபிரதேசத்தில் 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம்  செய்யப்பட்டார்..

இருப்பினும் இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளிப்புடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.

அதில், மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்கள் கழிப்பறையில் உணவு உண்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச விளையாட்டு துறைக்கு டேக் செய்து இதைப் பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

Categories

Tech |