இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 2 லட்சமாக அதிகரித்துள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு இலங்கையில் மோசமாக சரிந்த காரணத்தினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதோடு விலையும், விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதைத்தொடர்ந்து இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை அதிகபட்சமாக ஒரு சவரன் 1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.