Categories
மாவட்ட செய்திகள்

அதிரடி காட்டும் ஸ்டாலின்…! உடனடி நடவடிக்கையால்…. நிம்மதியில் தமிழக மக்கள்….

சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்கள் அழைப்பை எடுத்து பதில் அளித்து பேசி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர் பகுதியில் மழைநீர் சற்று வழிந்த நிலையில் பிற்பகல் பெய்த மழையால் மீண்டும் தேங்கிய மழைநீரானது வெளியேற வழியில்லாமல் குளம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் ஜி.என் சிட்டி சாலை, ராகவையா சாலை, கவி புல்லா சாலை, பசுல்லா சாலை, தியாகராய நகரில் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்த படி செல்கின்றன. சாலைகளில் தேங்கி உள்ள நீரை அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அழைப்புகளுக்கு உரிய பதில் அளித்தும், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகள் ஆலோசனை கூறி வருகின்றனர்.

அப்போது எழிலகத்திற்கு சென்ற முதலமைச்சர் முக. ஸ்டாலின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களின் அழைப்பு எடுத்து பதிலளித்து பேசிய அவர், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து 4-வது நாளாக மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட தியாகராய நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து நிவாரண முகாம்களிலும் மக்களை சந்தித்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Categories

Tech |