நடிகை ஸ்ரீதிவ்யா மூன்று ஆண்டுகளுக்குப் பின் கதாநாயகியாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரீதிவ்யா ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் . நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இவரது கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘காக்கிச்சட்டை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ஜீவா, ஈட்டி, மருது, பென்சில் ,பெங்களூர் நாட்கள் ,மாவீரன் கிட்டு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். கடைசியாக கடந்த 2017-லில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ .
இதன் பின்னர் ஸ்ரீதிவ்யா மூன்று வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் . இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக நடிக்கிறார் . மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார் .