ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெர்மன் கடற்படை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்டகாலமாக பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க ஜெர்மன் நாட்டின் கடற்படை தலைவரான schoenbach சமீபத்தில் இந்தியாவின் தலைநகரில் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவை உக்ரேனால் ஒருபோதும் மீட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் அதிபரான புடின் மிகவும் மரியாதைக்குரியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த கருத்தை ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகம் மிக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் கடற் படைத் தலைவரான Schoenbach தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.