Categories
தேசிய செய்திகள்

“அதிரடி அறிவிப்பு” இன்று முதல் தொடக்கம்…. முந்துங்கள் மக்களே…..!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டது. அதை தவிர பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிகள் செல்லும் வகையில் சென்னையில் இருந்து கோவை, மதுரை, ஹஸ்ரத் நிஜாமுதீன், சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னை-ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் அக்டோபர் 19 முதலும், சென்னை-மதுரை, சென்னை-கோவை ரயில்கள் அக்டோபர் 20ஆம் தேதி முதலும் இயக்கப்பட இருக்கின்றன.

Categories

Tech |