பிக்பாஸ் – 4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது . கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடந்து முடிந்தது . இந்நிலையில் இந்த டாஸ்க்கில் யார் சிறப்பாக செயல்பட்டவர் ,யார் மோசமாக செயல்பட்டவர் என்பதை வரிசைப்படுத்தும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிலிருந்து 13 வரை உள்ள ரேங்க்கில் முதல் 6 இடங்களைப் பிடிக்க போட்டியாளர்கள் அனைவரும் போட்டி போட்டு வருகின்றனர்.
இதையடுத்து ‘ஒருத்தர நோமினேஷன் ல இருந்து சேவ் பண்றேன்னு சொல்லி சேவ் பண்ணதால அவங்க டாப் 6- ல வரக்கூடாது’ என பாலாஜி வழக்கம்போல தன் கருத்தை எடுத்து அதிரடியா முன்வைக்கிறார் . இதைக் கேட்டு கடுப்பான ஜித்தன் ரமேஷ் திடீரென ஆவேசப்பட்டு டாப் 6-ல நீ வரலாம்ன்னு பாக்குறியா ? என அதிரடியாய் பேசுகிறார். இந்த டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்றைய முதல் புரோமோவில் தெரிகிறது.
#Day60 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8H8C4aBuYp
— Vijay Television (@vijaytelevision) December 3, 2020