Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேறு, பாஜக வேறு….! நாங்கள் பொறுப்பு கிடையாது… கைவிட்ட அண்ணாமலை ..!!

பெருமழை வந்தாலும் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீரும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை,

ஏற்கனவே நாம் சொல்லி இருக்கின்றோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேறு, பாரதிய ஜனதா கட்சி வேறு. பல இடங்களில் பேசி இருக்கின்றோம், கொள்கை அடிப்படையில் ஒரு கூட்டணியில் இருக்கின்றோம். அதனால் நான் பேசுகின்ற பேச்சுக்கு மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொறுப்பு கிடையாது, அதே போல அவர்கள் பேசுகின்ற பேச்சுக்கு பாஜக பொறுப்பு கிடையாது.

நாம இந்த பிரச்னையை பொறுத்தவரை ஒரே ஒரு முக்கியமான கேள்வி கேட்கிறோம்… முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள் செய்ய நீங்கள் தவறிவிட்டீர்கள், அது தான் பிரச்சனை. அடுத்தக்கட்ட பணி என்றால் செக்சன் மோட்டார், இப்ப இந்த மழை தண்ணீரை உறிஞ்சி வெளிய போறதை பார்த்தீர்கள் என்றால் இதற்கு முன்பு பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து வாடகை எடுத்துட்டு வந்து செக்சன் மோட்டார் நிறைய வைத்திருப்பார்கள்.

இந்த முறை இல்லவே இல்லை, 3, 4 நாட்கள் இல்லை அதற்கு பிறகு முட்டிக்கு மேல் தண்ணீர் வந்ததற்குப் பிறகுதான் டிவிஎஸ் நிறுவனமோ, வேற வேற நிறுவனங்களிலிருந்து பெரிய மோட்டாரை வாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள்.சென்னையில் வாட்டர் லாகிங் பாயின்ட் நமக்கு தெரியும். 380 பாயிண்ட் எதோ சொல்லியிருக்கிறார்கள் வாட்டர் லாகிங் பாயிண்ட், அவ்வளவு பாயிண்ட் என்று தெரிந்த பின்பும் கூட அந்த பாயிண்ட்ல முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் என்ன எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சி என்னுடைய கேள்வி என தெரிவித்தார்.

Categories

Tech |