Categories
மாநில செய்திகள்

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு” கொத்து கொத்தாக அள்ளிய அதிகாரிகள்…. என்னென்ன சிக்கியது தெரியுமா….!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என எஸ்பி வேலுமணி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் 10 கார்கள், 316 ஆவணங்கள், 9.48 கி.கி வெள்ளி பொருட்கள், 1228 கிராம் தங்க நகைகள், 32.98 லட்சம் ரொக்கம், 2 வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவைகள் கைப்பற்றப்பட்டதாகவும், சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் 2 ஸ்மார்ட் போன்கள், 4 வங்கி லாக்கர் சாவிகள், 120 ஆவணங்கள், 8.28 கிகி தங்க நகைகள், 1872 கிராம் தங்க நகைகள், 18.37 லட்சம் ரொக்கம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்‌. மேலும் எஸ்பி வேலுமணி மீது கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சி. விஜயபாஸ்கர் மீது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததில் முறைகேடு நடத்தியதாகவும் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |