Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்….! கழகத்தினர் கோஷத்தால் பரபரப்பு…!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று தொண்டர்கள் முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும், தெப்பக் குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கும், மரியாதை செலுத்தினார். அவருடன் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், ரகுபதி, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் எம்பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |