தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் நெருங்க இருப்பதால் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் aadhan media நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 130, 100 இடங்களிலும், குமுதம் ரிப்போர்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 125, திமுக 109, ராஜ் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 124, திமுக 94 இடங்களிலும், Democaracy network நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 122, திமுக 11 இடங்களில் வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது.