Categories
அரசியல்

அதிமுக சாகா வரம் பெற்றது…  “சோதனை எங்களுக்கு புதுசு கிடையாது”….  முன்னாள் அமைச்சர் பேச்சு…!!!

சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு ராஜபாளையத்தில் இரண்டு பணிமனை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய 5 பணிமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “அதிமுகவிற்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ? அப்போதெல்லாம் இருந்தவர்கள்தான் இப்போதும் இருக்கின்றனர். திடீரென்று பகுதியில் வந்தவர்கள் பகுதியிலேயே போய்விட்டனர்.

அதிமுக சாகாவரம் பெற்ற இயக்கம். 1996 ஆம் ஆண்டு ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கூட நான் திருத்தங்கல் நகராட்சியில் துணைத் தலைவராக வெற்றி பெற்றேன். சோதனை என்பது அதிமுகவுக்கு புதிது கிடையாது. சோதனைகள் வரும்போது தான் எரிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ? அதே போன்று அதிமுகவும் மீண்டு வரும் என்று கூறினார்.

Categories

Tech |