Categories
மாநில செய்திகள்

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS”….. ட்விஸ்ட் வைத்த முதல்வர்….. வைரலாகும் பதிவு….!!!!!

ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று உடல் நல குறைவு காரணமாக சென்னை எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் உடல் சோர்வு இருப்பதால் அவருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு தொற்று உறுதியானது. இடைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்

இந்நிலையில் “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓபிஎஸ் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் கிடையாது எனக் கூறி கட்சியை விட்டு நீக்கிய நிலையில், முதல்வர் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக இபிஎஸ்-க்கு வைக்கும் செக் என்று பார்க்கப்படுகிறது.

Categories

Tech |