Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் யாரும் இதை செய்யவில்லை…. துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அதிமுக ஆட்சியில் எந்த அமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக இருக்கிறது. அதை தமிழக  அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன் கூறியதாவது, அதிமுக 10 வருட கால ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு மேற்கொண்டது இல்லை. மேலும் இதை பற்றி பேசுவதற்கு இபிஎஸ், ஓபிஎஸ் க்கும் தார்மீகம் இல்லை. தனக்கு 80 வயது ஆகியும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |