அதிமுகவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருக்கிறார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி போன்ற இருவருக்குள்ளேயும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும் அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
இந்த சூழலில் அதிமுக அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருக்கிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சூழலில் அவரை அரசியல் ஆலோசகராக நியமித்திருக்கிறார். முன்னதாக வெள்ளை மண்டி நடராஜன், ஆர் டி ராமச்சந்திரன், சி திருமாறன், ஆர் பி பாபு போன்றோரை அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.