சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுவில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. இந்த ஒற்றை தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பன்னீர்செல்வத்துக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்னொரு திருமணம் மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று தெரியும் அந்தப் பிரச்சினைக்கு செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது அதிமுக பொதுக்குழுவில் எந்த வகையிலும் பெயர் குறிப்பிடாமல் சூசகமாகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.