செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முழுக்க முழுக்க விடியா திமுக அரசின் பழிவாங்குகின்ற செயல் இது. பொதுவாகவே ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கூட இந்த விடியாத அரசுக்கு இல்லை. ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டு ஒரே பணியை துடியாய் துடித்து செய்கின்றது . அது என்னவென்று சொன்னால்,
குறிப்பாக எதிர்க்கட்சி…. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியினுடைய கண்களையும், திமுகவை உறுத்தி கொண்டிருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழித்துவிட வேண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நற்பெயரிற்கு கழகம் கற்பிக்கவேண்டும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள சூழ் நிலையில் மக்கள் மத்தியில் ஒரு மாயை….
அதாவது ஒரு செயற்கையாக ஒரு தோற்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கு லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்ற ஒரு போலியான ஒரு மாயையை உருவாக்க வேண்டுமென்ற அந்த ஒரு திட்டமிட்ட முனைப்போடு காவல்துறையை ஏவிவிட்டு இன்றைக்கு பழிவாங்குகின்ற ஒரு செயலில் இன்றைக்கு இந்த விடியாத அரசுசெய்து கொண்டிருக்கின்றது என விமர்சித்தார்.