Categories
அரசியல்

அதிமுகவில் இருந்தவர்களை…. திமுக வாடகைக்கு வாங்கியுள்ளது…. ஈபிஎஸ் குற்றசாட்டு…!!!

எடப்பாடி பழனிச்சாமி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது, “அ.தி.மு.க.வின் முந்தைய உறுப்பினர்களில் 15 பேர் தி.மு.க.வில் எம்.எல்.ஏக்.களாக உள்ளனர்.

தி.மு.க கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வயதாகி விட்ட காரணத்தினால் அ.தி.மு.க.வில் உள்ளவர்களை அவர்கள் வாடகைக்கும், பணத்திற்கும் வாங்கியுள்ளனர். மேலும் தி.மு.க. அரசுக்கு சிறந்த முறையான நிர்வாக திறமையும், தலைமையும் இல்லை” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |